மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2023 திருத்தங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவிப்பு - நாள் : 23.02.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 24, 2023

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2023 திருத்தங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவிப்பு - நாள் : 23.02.2023

அரசுத் தேர்வுகள் இயக்குநர்,

நாள் : 23.02.2023

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2023 திருத்தங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக.

பார்வையில் காணும் இவ்வலுவலகக் கடிதத்தில், அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் மார்ச் ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்விற்கான தங்கள் பள்ளி மாணாக்கர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் இருப்பின், 03.02.2023 முதல் 10.02.2023 வரையிலான நாட்களில் EMIS PORTAL லில் Nominal Roll பகுதிக்குச் சென்று அத்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.

தற்போது, முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும், EMIS PORTAL லில் மேற்கொண்ட திருத்தங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட மார்ச் ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்விற்கான தங்கள் பள்ளி மாணாக்கர்களின் பெயர்ப்பட்டியலை 24.02.2023 p.m. பிற்பகல் முதல் www.dgettn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று தங்கள் பள்ளிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.