ஜாக்டோ ஜியோ (05.03.2023) போராட்டத்திற்கு தமிழ்நாடு நீதித்துறை சங்கம் ஆதரவு... ஒன்றினைந்து போராடவும் முடிவு.. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 27 فبراير 2023

ஜாக்டோ ஜியோ (05.03.2023) போராட்டத்திற்கு தமிழ்நாடு நீதித்துறை சங்கம் ஆதரவு... ஒன்றினைந்து போராடவும் முடிவு..

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தமிழ்நாடு நீதித்துறை சங்கம் ஆதரவு... ஒன்றினைந்து போராடவும் முடிவு..

புதிய பென்ஷன் திட்டத்தை மீட்டெடுத்தல், நிலுவையில் உள்ள அகவிலைப்படியைப் பெறுதல் மற்றும் சரண் ஒப்படைப்பு உரிமையை மீண்டும் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பில் வரும் 05.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகம் தழுவிய மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டத்தில், தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கமும் கலந்து கொள்வதென எடுக்கப்பட்ட முடிவின் படி. மேற்படி உண்ணாவிரதத்தில் நீதித்துறை ஊழியர்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டு உண்ணாவிரதம் முழு வெற்றி பெற தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க அனைத்து மாவட்ட நிர்வாகிகள், முன்னனி ஊழியர்கள் செயலாற்ற வேண்டுமென்றும், அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் வரும் 05.03.2023 அன்று அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டத்தில் பெருவாரியான நீதித்துறை ஊழியர்களுடன் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டம் வெற்றி பெறவும். அதன் மூலம் அனைத்து நிலுவைக் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் நமது பங்கேற்பை உறுதி செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.