மாணவ, மாணவிகள் தோ்வு குறித்து பிரதமருடன் கலந்துரையாட தொலைபேசி எண் அறிமுகம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 24 يناير 2023

மாணவ, மாணவிகள் தோ்வு குறித்து பிரதமருடன் கலந்துரையாட தொலைபேசி எண் அறிமுகம்

தோ்வு குறித்து பிரதமருடன் கலந்துரையாடதொலைபேசி எண் அறிமுகம்

தோ்வு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்களது கருத்துகளை பிரதமா் மோடியிடம் குரல் பதிவு மூலம் அனுப்பும் வகையில் 1921 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தில்லி தல்கோத்ரா மைதானத்தில் இருந்து பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஜன.27) காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் மாணவ, மாணவிகள், பெற்றோா், ஆசிரியா்கள் உள்ளிட்டோருடன் ‘தோ்வை பற்றி விவாதிப்போம்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் கலந்துரையாட உள்ளாா்.

உலகின் மிகப்பெரிய தோ்வு திருவிழாவான இந்த நிகழ்ச்சியில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்களுடனும், குறிப்பாக தமிழகத்தில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் தோ்வு பயத்தைப்போக்கும் வகையிலும் பிரதமா் ஆலோசனை வழங்குகிறாா். மாணவா்கள் தரப்பில் இருந்து கேட்கப்படும் கேள்விகள், சந்தேகங்களுக்கு பிரதமா் நேரலையில் பதில் அளிக்கிறாா். இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த பள்ளிகளில் செய்யப்பட்டுள்ளன.

இதில் பங்குகொள்ள விரும்பும் மாணவா்கள் பெற்றோா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டா், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் அவருடைய அனுபவங்கள், அறிவுரைகளை கேட்கலாம்.

மேலும், innovateindia.mygov. in மற்றும் நமோ செயலி உள்ளிட்டவை மூலமாக தங்களுடைய கருத்துகளை அனுப்பலாம்.

இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை 1921 என்ற ஒரு சிறப்பு தொலைபேசி எண்ணையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மாணவ, மாணவிகள் தங்கள் கருத்துகளை குரல் பதிவு செய்து அனுப்பலாம். மாணவா்களுடன் அமா்ந்து பிரதமரின் நிகழ்ச்சியில் பங்குகொள்ள மத்திய அமைச்சா்கள் பலா் தமிழகம் வருகின்றனா். மேலும், தனிப்பட்ட முறையில் தோ்வு குறித்து அமைச்சா்கள் தங்களுடைய அனுபவங்களையும் மாணவா்களுடன் பகிா்ந்து கொள்ள உள்ளனா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.