போகியின் போது பொதுமக்கள் பழைய பொருட்கள் எரிப்பதை தடுக்க புதிய முயற்சி - பழைய பொருட்களை வாங்கும் மாநகராட்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, January 7, 2023

போகியின் போது பொதுமக்கள் பழைய பொருட்கள் எரிப்பதை தடுக்க புதிய முயற்சி - பழைய பொருட்களை வாங்கும் மாநகராட்சி

போகியின் போது பொதுமக்கள் பழைய பொருட்கள் எரிப்பதை தடுக்க புதிய முயற்சி

பழைய பொருட்களை வாங்கும் சென்னை மாநகராட்சி

பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள்

பெருநகர சென்னை மாநகராட்சி - 1 முதல் 15 மண்டலங்களில் வருகின்ற போகி பண்டிகையை முன்னிட்டு 13.01.2023 மற்றும் 14.01.2023 ஆகிய நாட்களில் பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மக்கள் பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர் (Tyre) ரப்பர் ட்யூம், (Rubber Tube), மற்றும் நெகிழி (Plastic) எரிப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது சம்மந்தமாக. 30.12.2022 அன்று முதன்மை செயலர் / ஆணையர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற கலந்தாய்வு கூட்டம். பார்வை

பார்வையில் காணும் முதன்மை செயலர் / ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி. தக்க நடவடிக்கை மேற்கொள்ள 1 முதல் 15 மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வருகின்ற 13.01.2023 மற்றும் 14.01.2023 போகி பண்டிகைக்காக பொது மக்கள் பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர் (Tyre), ரப்பர் ட்யூப் (Rubber Tube), மற்றும் நெகிழி (Plastic) ஆகியவற்றை எரிப்பதை தடுப்பதற்காகவும் மற்றும் சுற்றுசூழல் மாசு ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கை கீழ்கண்டவாறு எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

எனவே, இதன்பொருட்டு 1 முதல் 15 மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தேவையில்லாத பொருட்களை எரிப்பதை தடுக்கும் வகையில் அவற்றை தனியாக பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் 08.01.2023 ஞாயிற்றுக்கிழமை முதல் ஒப்படைக்க, மண்டல அலுவலர்கள் 1 முதல் 15 வரை கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்து பொது மக்களுக்கு 07.0123 முதல் விழிப்புணர்வு (Awarenes) ஏற்படுத்தும் வகையில் BOV வாகனம் மூலம் Audio message விளம்பரம் செய்யுமாறும், மேலும் அனைத்து CI. CS & AEE(SWM) தனிக்கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.