நாளை பள்ளிகள் திறப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 16 يناير 2023

நாளை பள்ளிகள் திறப்பு

நாளை பள்ளிகள் திறப்பு

பொங்கல் பண்டிகை விடுமுறை இன்று நிறைவு பெறுகிறது; நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு, 14ம் தேதி முதல் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை இன்று நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், பொங்கலுக்கு கூடுதலாக நாளையும் விடுமுறை விடப்படும் என, சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இதுகுறித்து, பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷிடம் நேற்று நிருபர்கள் கேட்டபோது, ''பள்ளி, கல்லுாரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுமுறையில் மாற்றம் இல்லை,'' என்றார்.

இதற்கிடையில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், பொங்கல் பண்டிகைக்கு ஒரு நாள் மட்டுமே விடுமுறை விடப்பட்டு, நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. அதனால், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழக அரசின் விடுமுறை நாட்களையே, கே.வி., பள்ளிகளிலும் பின்பற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.