அரசுப் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் - கல்வி மாவட்டம் வாரியாக ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 3 يناير 2023

அரசுப் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் - கல்வி மாவட்டம் வாரியாக ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

அரசுப் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் - கல்வி மாவட்டம் வாரியாக ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
பள்ளிக்கல்வி - உடற்கல்வி 2021-2022 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு மற்றும் உடற்கல்வி உபகரணங்கள் மாநில திட்ட இயக்ககம் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி) மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்துவகை அரசுப் பள்ளிகளுக்கு (தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்) வழங்குதல் - சார்ந்து.

பார்வை: பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின்(நாட்டு நலப்பணித் திட்டம்) செயல்முறைகள் சென்னை-6.

ந.க.எண்.010311/எம்/இ4/2022, நாள். 17.10.2022

தமிழகத்தில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்படும் 24,266 அரசு தொடக்கப் பள்ளிகள், 6948 அரசு நடுநிலைப் பள்ளிகள், 3,120 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 3057 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் நலன் கருதி, அம்மாணவர்களை பள்ளிகல்வித்துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொண்டு உயர்கல்வியில் மற்றும் வேலைவாய்ப்புகளில் அரசின் விளையாட்டு சார்ந்த முன்னுரிமைகளை பெற வழிவகை செய்யும் பொருட்டு மாநில திட்ட இயக்ககம் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி) (SSA) மூலம் உடற்கல்வித்துறை சார்ந்த விளையாட்டு உபகரணங்கள் 120 கல்வி மாவட்டங்களை மையமாகக் கொண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிகளுக்கு வழங்கும் பொருட்டு மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்டக்கல்வி அலுவலகங்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள், அரசு நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அல்லது பொறுப்பாசிரியர்கள் பெற்றுச் செல்ல சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கிடவும், பள்ளிகளில் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்திடவும், இதற்கான ஒப்புகை சீட்டினை பெற்று இருப்புகோப்பு பராமரிக்கவும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.