திண்டுக்கல் மாவட்ட உள்ளூர் விடுமுறை - அரசு பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 27 يناير 2023

திண்டுக்கல் மாவட்ட உள்ளூர் விடுமுறை - அரசு பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!!

திண்டுக்கல் மாவட்ட உள்ளூர் விடுமுறை - அரசு பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!! Dindigul District Local Holiday - Govt School Students Tragedy!!
பள்ளி விடுமுறை; மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்
திண்டுக்கல் மாவட்டம் பன்றிமலை சேர்ந்தவர் கதிரேசன். இவர் தனது குடும்பத்துடன் தாடிக்கொம்புவில் வசித்துக் கொண்டு டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் மனோஜ் (14) அங்குள்ள அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கதிரேசனின் உறவினர் சுப்பிரமணி. இவர் தாடிக்கொம்பு அருகே உள்ள கருங்கல் பட்டியில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு திருமுருகன் (14) என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.   குடியரசு தின மற்றும் பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை என தொடர்ந்து இரண்டு நாட்கள் பள்ளி விடுமுறை என்பதால் கதிரேசன் தனது மகன் மனோஜ் குமாரை உறவினரான சுப்பிரமணி வீட்டில் விட்டுள்ளார். இதனிடையே மாணவர்கள் இரண்டு பேரும் இன்று விளையாடு சென்றுள்ளனர். அப்பொழுது ஊரின் அருகே உள்ள குடகனாற்றில் மாணவர்கள் இரண்டு பேரும் ஆற்றில் இறங்கி குளிப்பதை அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவர் பார்த்துள்ளார் பின்னர் அவர்கள் நீச்சல் தெரியாமல் தத்தளித்து மூழ்கிக் கொண்டிருந்ததை பார்த்து கூச்சல் போட்டுள்ளார்.   இதனையடுத்து அங்கு வந்த பொது மக்கள் ஆற்றில் இறங்கி நீச்சல் தெரியாமல் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த மாணவர்களின் உடல்களை கைப்பற்றினார்.  தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வரைந்து வந்த தாடிக்கொம்பு போலீசார் மாணவர்களின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.