வேளாண் பல்கலையில் இளங்கலை உடனடி மாணவர் சேர்க்கை Bachelor of Agriculture Immediate Enrollment - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 22 يناير 2023

வேளாண் பல்கலையில் இளங்கலை உடனடி மாணவர் சேர்க்கை Bachelor of Agriculture Immediate Enrollment

வேளாண் பல்கலையில் இளங்கலை உடனடி மாணவர் சேர்க்கை Bachelor of Agriculture Immediate Enrollment

மதுரை: கோவை வேளாண் பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில் காலியாக உள்ள 1105 இளங்கலை பாடப்பிரிவுகளில் உடனடி மாணவர்கள் சேர்க்கை ஜன. 24 ல் நடக்கிறது.

பல்கலை உறுப்பு கல்லுாரிகளுக்கு உடனடி மாணவர் சேர்க்கை பொருந்தாது. அங்கு இளங்கலையில் காலியாக இருந்தால் அவை காலியிடங்களாக கருதப்படும். பல்கலை இணைப்பு கல்லுாரிகளுக்கு (தனியார்) மட்டுமே பொருந்தும். ஜன. 24 ல் கோவை வேளாண் பல்கலை கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்களிடம் மட்டும் கலந்தாய்வு கட்டணம் பெறப்படும்.

உடனடி சேர்க்கையில் அப்போதைக்கு காலியிடம் இருக்கும் கல்லுாரியில் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அடுத்தடுத்த கல்லுாரி வாய்ப்பு கிடைக்காது.

பொதுக்கலந்தாய்வில் இடம் கிடைத்தும் தவறவிட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்கள், புதிதாக பங்கேற்பவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் 0422 - 661 1345ல் தொடர்பு கொள்ளலாம் அல்லது ugadmissions@tnau.ac.in மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.