5ம் வகுப்பு மாணவர் திடீர் மரணம் தலைமையாசிரியை சஸ்பெண்ட் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 10 يناير 2023

5ம் வகுப்பு மாணவர் திடீர் மரணம் தலைமையாசிரியை சஸ்பெண்ட்

5ம் வகுப்பு மாணவர் திடீர் மரணம் தலைமையாசிரியை சஸ்பெண்ட்

துாத்துக்குடி:திருச்செந்துார் அருகே பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர் வெடிs சத்தத்தால் தரையில் விழுந்து இறந்ததில் தலைமையாசிரியை 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் அருகே தோப்பூரில் அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளியில் புத்தாண்டு விடுமுறையன்று வளாகத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அதைக்கேட்டு, ஐந்தாம் வகுப்பு மாணவன் அஜய்குமார், 10, அதிர்ச்சியில் மயங்கி விழுந்தான். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அஜய்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். ஆனால், அவன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வங்க பெற்றோர் மறுத்தனர்.

பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகளுடன் நடந்த பேச்சுக்கு பின், சமரசம் அடைந்து உடலை பெற்றுக் கொண்டனர்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் பள்ளி தலைமையாசிரியை கனகவள்ளி, 59, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.