ஜாக்டோ-ஜியோ - திருவள்ளூர் மாவட்டம் - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - நாள் : 5.01.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 4 يناير 2023

ஜாக்டோ-ஜியோ - திருவள்ளூர் மாவட்டம் - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - நாள் : 5.01.2023

ஜாக்டோ-ஜியோ திருவள்ளூர் மாவட்டம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நாள் : 5.01.2023, வியாழக்கிழமை

நேரம் : மாலை 5.00 மணி

இடம் : திருவள்ளூர் டோல்கேட் (அரசு மருத்துவ கல்லூரி அருகில்)

அன்புள்ள அரசு ஊழியர்களே, ஆசிரியர்களே, பணியாளர்களே! வணக்கம், கடந்த 26.12.2022 அன்று நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவின் அடிப்படையில் எதிர்வரும் 05.01.2023 அன்று நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்த்திட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடத்திட முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், திருவள்ளூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க கேட்டுக்கொள்கிறோம்.

கோரிக்கைகள்

பழைய பென்ஷன் திட்டத்தினை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.

G முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக்கூலியில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி, எம்.ஆர்.பி செவிலியர், வருவாய் கிராம உதவியாளர், ஊர்புற நூலகர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

சாலை பணியாளர்களில் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.

காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். 21 மாத ஊதியமாற்று நிலுவைத் தொகை உடன் வழங்க வேண்டும்.

மாண்புமிகு முதல்வர் பங்கேற்ற வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் முதல்வரிடம் ஜாக்டோ-ஜியோ சார்பில் வழங்கப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர், அரசு பணியாளர் மற்றும் துறை பிரிவு வாரி ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைளை நிறைவேற்றிட வேண்டும்.

இவண்: மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜாக்டோ ஜியோ - திருவள்ளூர் மாவட்டம்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.