மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - நாள்: 28.01.2023 சனிக்கிழமை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 24 يناير 2023

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - நாள்: 28.01.2023 சனிக்கிழமை

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - நாள்: 28.01.2023 சனிக்கிழமை

விருதுநகர் மாவட்ட நிர்வாகம்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்கும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும்

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாள்: 28.01.2023 சனிக்கிழமை

நேரம்: காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை

அனுமதி இலவசம்

10,000 பணி வாய்ப்புகள் + 150 நிறுவனங்கள் இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்று வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்

(மாற்றுத்திறனாளிகள்/ஆதரவற்ற விதவை/ இலங்கை தமிழர்கள் ஆகியோர்களுக்கான சிறப்பு காலிப்பணியிடங்கள் உள்ளன)

கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை ஐ.டி.ஐ/ டிப்ளமோ / நர்சிங் / B.E., பட்டதாரிகள்

வயது : குறைந்தபட்ச வயது : 18

நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற தமிழ்நாடு அரசு தனியார் வேலை இணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

மேலும் தங்களின் கல்விச்சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அடையாள அட்டை RESUME நகல்கள், மற்றும் புகைப்படங்களுடன் நேரில் வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அருப்புக்கோட்டை பேருந்து நிலையங்களிலிருந்து S.B.K. கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.