ஒரே நேரத்தில் 2 படிப்பு; யு.ஜி.சி., உத்தரவு
'மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு படிப்புகளை படிக்க, அனைத்து கல்லுாரிகளும், பல்கலைகளும் அனுமதிக்க வேண்டும்' என, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., செயலர் தாகூர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஒரே நேரத்தில் இரண்டு வகை பட்டப் படிப்புகளை படிப்பதற்கு அனுமதி அளிக்கும் வழிமுறைகளை, கடந்த ஆண்டு ஏப்ரலில் யு.ஜி.சி., வெளியிட்டது. அனைத்து வகை கல்லுாரிகளும், பல்கலைகளும் இந்த வழிமுறைகளின் படி, தங்களிடம் வரும் மாணவர்கள், ஒரே நேரத்தில் இரண்டு வகை படிப்புகளில் சேர அனுமதிக்க வேண்டும்.
ஆனால், ஒரு படிப்பில் சேர்ந்த பின், அதே காலகட்டத்தில் இன்னொரு படிப்பில் சேர விரும்பும் மாணவர்களிடம், அசல் மாற்று சான்றிதழ் மற்றும் இடமாற்று சான்றிதழ் கட்டாயம் வேண்டும் என, கல்லுாரிகளும், பல்கலைகளும் வலியுறுத்துவதால், மாணவர்கள் இரண்டாவது படிப்பில் சேர முடியவில்லை என, தெரிகிறது.
எனவே, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும், ஒரே நேரத்தில் இரண்டு படிப்புகளை படிக்க வகை செய்யும் வகையில், தங்கள் நிர்வாக வழிகாட்டுதல்களை அமைத்து, இரண்டு படிப்புக்கான வசதிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.