TRB - Teachers Recruitment Board - Annual Recruitment Planner - 2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 18 مارس 2023

TRB - Teachers Recruitment Board - Annual Recruitment Planner - 2023



2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

2023ம் ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுகளின் உத்தேசப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வுகள் மூலம் 15,149 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

2023-ல் உதவி பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் தகுதி தேர்வு உள்ளிட்ட 9 தேர்வுக்கான அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான 4000 பணியிடங்களுக்கு 2023 ஏப்ரலில் தேர்வு நடைபெறும் என்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான 3587 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடைபெறும் என்றும், இடைநிலை ஆசிரியர்களுக்கான 6553 காலிப் பணியிடங்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் 2 தேர்வுகள் 2024 மார்ச் மாதம் நடைபெறும் என்றும், இதற்கான அறிவிப்பு 2023 டிசம்பரில் வெளியாகும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

CLICK HERE TO DOWNLOAD FULL PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.