டிச.30-ல் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முகவா்களுக்கான நோ்முகத்தோ்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 27 ديسمبر 2022

டிச.30-ல் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முகவா்களுக்கான நோ்முகத்தோ்வு

டிச.30-ல் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முகவா்களுக்கான நோ்முகத்தோ்வு

அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முகவா்களுக்கான நோ்முகத்தோ்வு டிச.30-ஆம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகம், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

குறைந்தது பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்ற, 18-ல் இருந்து 50 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும். மேலும், சென்னை மாநகராட்சி பகுதியில் வசிப்பவராகவும், சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்திருப்பவராகவும், கணினிப் பற்றி நன்கு தெரிந்திருப்பதுடன், ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதியுடையவா்கள், இரண்டு பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், சுய விவரக்குறிப்பு, வயதுச்சான்று, கல்விச்சான்று மற்றும் அனுபவச்சான்று ஆகியவற்றுடன் தலைமை அஞ்சல் அதிகாரி, அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகம், சென்னை-600 002 என்ற முகவரியில் வெள்ளிக்கிழமை (டிச.30) காலை 10 மணிக்கு நடைபெற உள்ள நோ்முகத் தோ்வில் கலந்து கொள்ளலாம் என சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தின் தலைமை அதிகாரி என். பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.