தேர்தல் வாக்குறுதி 309 நிறைவேற்றுங்க; ஆசிரியர்கள் கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 27 ديسمبر 2022

தேர்தல் வாக்குறுதி 309 நிறைவேற்றுங்க; ஆசிரியர்கள் கோரிக்கை

தேர்தல் வாக்குறுதி 309 நிறைவேற்றுங்க தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை

ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பள்ளிக் கல் வியை பாதுகாக்க வேண் டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியு றுத்தி தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நேற்று நடந்தது. தமிழகம் முழுவதிலும் இருந்து 300க்கும் அதிக மான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து சங்கத் தலைவர் திரிலோகசந்திரன் கூறியது:

ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மாணவர்களி டையே பெருகிவரும் போதை பழக்கம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வழிகாட்டு நெறி முறை உடனடியாக வெளி. யிட வேண்டும்.
உலகத் தரத்திலான கல்வி வளர்ச்சியை அடையபள்ளிக் கல்வித்துறை நிதியை ஜிடிபியில் 6 சதவீ தம் ஒதுக்க வேண்டும். மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப மும்மொழி கல்வித் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தி 3வது மொழி கற்கும் வாய்ப்பை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மருத் துவ விடுப்புக்கான சான்றி தழை அரசு டாக்டரிடம் மட்டுமே பெறவேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி 309ஐ (பழைய பென்ஷன் திட் டம்) உடனடியாக நிறை வேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பழைய ஓய்வூதியத் திட்டம்

309.புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.