தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிக்கை - நாள் 22.12.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 22 ديسمبر 2022

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிக்கை - நாள் 22.12.2022

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் - நாள் 22.12.2022

பெறுநர்

மதிப்புமிகு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (JDP) அவர்கள், பள்ளிக் கல்வி ஆணையரகம், கல்லூரி சாலை, சென்னை-6.

மதிப்புமிகு பள்ளிக் கல்வி இணை இயக்குனர் அவர்களுக்கு,

இனிய வணக்கங்கள்,

பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஆட்சிக் காலத்தில் 17.12.2012-ல் 18000 பட்டதாரி ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது 17.12.2022-ல் பத்தாண்டு காலம் பணிமுடித்து தேர்வு நிலை (Selection Grade) பெறுவதற்கு தயார் நிலையில் உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் சுமார் 500 ஆசிரியர்கள் உள்ளனர். எனவே இவர்கள் தேர்வுநிலைக்கு கருத்துருக்கள் அனுப்பி தேர்வுநிலை முடிக்க மாவட்ட அலுவலகங்களில் ஆள் பற்றாக்குறை இருப்பதால் கால தாமதம் ஆகும். எனவே இவ்வாசிரியர்களுக்கு விடுமுறை நாட்களில் கடந்த காலங்களில் நடத்தப்பட்டதுபோல் ஜமாபந்தி போன்ற நிகழ்வை நடத்தி தேர்வுநிலை வழங்கினால் ஏதுவாக இருக்கும். எனவே தாங்கள் இந்த 18000 ஆசிரியர்கள் துரிதமாக தேர்வுநிலை பெற ஆவண செய்யும்படி கனிவுடன் வேண்டுகிறோம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.