ஆசிரியர்கள் 15 பேர் மயக்கம்!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 28 ديسمبر 2022

ஆசிரியர்கள் 15 பேர் மயக்கம்!!

ஆசிரியர்கள் 15 பேர் மயக்கம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் அவர்களது போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் 15 பேர் திடீரென மயக்கம் போட்டு விழுந்தனர். நிலைமை மோசமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா!

ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் நலன்

308.மாநில அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 80-வயது நிறைந்தவுடன் 20 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாற்றி 70-வயது நிறையும் பொழுது 10 சதவிகிதமும், 80-வயது நிறையும் பொழுது மேலும் 10 சதவிகிதமும் ஓய்வூதியம் வழங்கப்படும்.

பழைய ஓய்வூதியத் திட்டம்

309.புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்.

310. தமிழக அரசு அலுவலர்களின் பணி தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க மாநில நிர்வாகத் தீர்ப்பாயமும் (STATE ADMINISTRATIVE TRIBUNAL) தலைமைச் செயலாளர் / துறைச் செயலாளர் / துறைத் தலைவர் தலைமையிலான கூட்டு ஆலோசனைக் குழுக்களும் மீண்டும் அமைக்கப்படும்.
சம வேலைக்கு சம ஊதியம்

311.ரூ.8000/- அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அ.தி.மு.க. ஆட்சியில் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். அத்தகைய 20,000 ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கழக ஆட்சி, அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் காலமுறை ஊதியம் வழங்கும். ஆசிரியர் பணிக்காலத்தில் உயர்கல்வி கற்று பட்டம் பெறும் ஆசிரியர்களுக்கு கழக ஆட்சியில் அறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்து வழங்கி வந்த ஊக்கத்தொகை அ.தி.மு.க அரசினால் நீக்கப்பட்டுவிட்டது. இந்த ஊக்கத்தொகை மீண்டும் தொடர்ந்து வழங்கப்படும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.