இரவு காவலர் பணி விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு - 13.01.2023 விண்ணப்பிக்க கடைசி நாள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 27 ديسمبر 2022

இரவு காவலர் பணி விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு - 13.01.2023 விண்ணப்பிக்க கடைசி நாள்

இரவு காவலர் பணி விண்ணப்பிக்கலாம்: காஞ்சி. கலெக்டர் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அறிக்கை; காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் காலியாக உள்ள இரவுக் காவலர் பணியிடத்தை நிரப்ப அரசால் அனுமதிக்கப்பட்டதையடுத்து, கீழ்காணும் தகுதிகளுடைய காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த வேலைநாடுநர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒரு இரவுக் காவலர் பணி காலி இடத்துக்கு பொதுப் போட்டி (முன்னுரிமை அற்றவர்), (இன சுழற்சிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித்தகுதி எழுத படிக்க தெரிந்தவர் (5ம் வகுப்பு தேர்ச்சி), வயது வரம்பு 01.07.2022 அன்றைய தேதியில் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும்.
அதிகபட்ச வயது வரம்பு 32 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கையால் எழுதப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றின் நகலுடன் 28.12.2022 முதல் 13.01.2023 வரை மாலை 5.45 மணிக்குள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரிலோ/பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கவேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.