தமிழக பள்ளிகளுக்கு வரும் ஜனவரி மாதம் 13 நாட்கள் விடுமுறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 27 ديسمبر 2022

தமிழக பள்ளிகளுக்கு வரும் ஜனவரி மாதம் 13 நாட்கள் விடுமுறை

தமிழக பள்ளிகளுக்கு வரும் ஜனவரி மாதம் 13 நாட்கள் விடுமுறை!

பள்ளி மாணவர்களுக்கு தற்போது 2ம் பருவ தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜனவரி மாதத்தின் பள்ளிகள் விடுமுறை குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

பள்ளி விடுமுறை:

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு / 2ம் பருவ தேர்வுகள் நடத்தப்பட்டது. தேர்வுகள் முடிந்த பின்னர், டிசம்பர் 24ம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளி மாணவர்களுக்கான 3ம் பருவம் தொடங்க உள்ளது. அதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5, 2023ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2, 2023ம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில், 2023 ஜனவரி மாதம் பல பண்டிகைகள், சிறப்பு நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் என்று அதிக விடுமுறை நாட்கள் வர உள்ளது. ஜனவரி மாதத்தில் மொத்தம் 5 ஞாயிற்று கிழமைகள், 4 சனிக்கிழமைகள் விடுமுறையும், அது போக பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் என 3 நாட்கள் விடுமுறையும் வரவிருக்கின்றன. மேலும் ஜனவரி 26 குடியரசு தின விழா விடுமுறை என்று 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்தம் 13 நாட்களும், ஜனவரி 2,3,4ம் தேதி ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் விடுமுறை காரணமாக 16 நாட்களும் அடுத்த மாதத்தில் விடுமுறை ஆக வர உள்ளது. இதனால் மாணவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

هناك تعليق واحد:

  1. சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்கள் வார விடுமுறை ஆகும் இதையெல்லாம் கணக்கில் கொண்டு விடுமுறை என்று அறிவித்து மக்களிடம் ஆசிரியர்களுக்கு ஒரு அவப்பெயர் வாங்கி தருவதில் உங்கள் பங்கு சிறப்பாக உள்ளது

    ردحذف

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.