அரசு ஊழியர்களுக்கு 12% அகவிலைப்படி உயர்வு.. இம்மாநில அரசு ஜாக்பாட் அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, December 28, 2022

அரசு ஊழியர்களுக்கு 12% அகவிலைப்படி உயர்வு.. இம்மாநில அரசு ஜாக்பாட் அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு 12% அகவிலைப்படி உயர்வு.. மாநில அரசு ஜாக்பாட் அறிவிப்பு!

புத்தாண்டுக்கு முன் வந்த நல்ல செய்தி!

ஆண்டு இறுதியின் விற்பனை டிசம்பர் 25 முதல் 31 வரை- லேப்டாப்ஸ் மற்றும் டேப்லெட்டுகளுக்கு 45% வரை தள்ளுபடி அரசு ஊழியர்களுக்கு 12% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதாக திரிபுரா முதல்வர் அறிவித்துள்ளார்.

​அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்கு நீண்ட காலம் காத்திருந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் அதற்கான அறிவிப்பு வெளியானது. இது ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதுவும் தீபாவளி சமயத்தில் கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திரிபுராவில் அதிகரிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பிறகு மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் திரிபுரா மாநில அரசு ஊழியர்களின் நீண்ட நாள் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அகவிலைப்படி உயர்வுக்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ​முதல்வர் அறிவிப்பு!

மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மாணிக் சாஹா அறிவித்துள்ளார். இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி 8 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. திரிபுராவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசு ஊழியர்களைக் கவரும் வகையில் மாநில அரசு இந்த பெரிய முடிவை எடுத்துள்ளது.

​ஊழியர்கள் மகிழ்ச்சி!

அரசின் இந்த முடிவால் மாநில அரசு கருவூலத்தில் ஆண்டுக்கு ரூ.1,440.80 கோடி சுமை அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும், அரசின் இந்த முடிவால் 1,04,600 ஊழியர்களும் 80,800 ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அதாவது திரிபுராவில் இந்த அறிவிப்பால் மொத்தம் 1.85 லட்சம் பேர் பயனடைவார்கள்.

​சமாளிப்பது எப்படி?

அகவிலைப்படி உயர்வு குறித்து திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பேசுகையில், ”நிதிச் சுமை இருக்கத்தான் செய்யும். அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் பயனடைவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.