பணி பதிவேடுகளை (06.01. 2023) ஆசிரியர்கள் பார்வையிட்டு கொள்வதற்கு பள்ளிக்கல்வி ஆணையாளர் அவர்களின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 28 ديسمبر 2022

பணி பதிவேடுகளை (06.01. 2023) ஆசிரியர்கள் பார்வையிட்டு கொள்வதற்கு பள்ளிக்கல்வி ஆணையாளர் அவர்களின் செயல்முறைகள்

பணிப்பதிவேடுகளை 06.01.2023 க்குள் , வட்டார கல்வி அலுவலகம் சென்று சரிபார்த்துக்கொள்ளலாம்.- ஆணையாளர் செயல்முறைகள்

பணி பதிவேடுகளை (06.01. 2023) ஆசிரியர்கள் பார்வையிட்டு கொள்வதற்கு பள்ளிக்கல்வி ஆணையாளர் அவர்களின் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிப்பதிவேடு (SR)- ஈட்டிய விடுப்பு, மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் நாளது தேதிவரை மேற்கொள்ளப் பட்டுள்ளதை உறுதி செய்தல் அறிவுரைகள் வழங்குதல்- தொடர்பாக

தமிழ்நாட்டில் உள்ள அரசு/அரசு நிதியுதவி பெறும் தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்களது பணிப்பதிவேடுகளில் ஈட்டிய விடுப்பு, மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் நாளது தேதிவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்திட வழங்கப்படுகின்றன.

1. 06.01.2023 வரை விருப்பம் உள்ள ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள்/அலுவலகங்களுக்குச் சென்று பணிப்பதிவேட்டிலுள்ள பதிவுகளை சரிபார்த்துக்கொள்ளலாம். மேலும் 07.01.2023 அன்று அனைவரும் தங்களது பணிப்பதிவேடுகளில் உள்ள பதிவுகளை சரிபார்த்துக் கொள்ள சிறப்பு முகாம் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நடைபெறும்.

2. அரசு நிதியுதவி பெறும் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோரின் பணிப்பதிவேடுகள் சார்ந்த பள்ளிச் செயலர்களால் பராமரிக்கப்பட்டு மாவட்டக் கல்வி அலுவலரது ஒப்பளிப்பு பெறப்படுவதால், சார்ந்த விருப்பம் உள்ள ஆசிரியர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் இதனை சம்பந்தப்பட்ட பள்ளிச் செயலர்கள்/அலுவலகங்களில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

இப்பணி வரும் 7.1.2023 அன்றே முடிக்கப்பட வேண்டும் என்பதால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள்/வட்டாரக் கல்வி அலுவலர்கள்/ மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.