TNPSC தோ்வாணையம் வெளியிடும் முடிவுகளில் வெளிப்படைத்தன்மை தேவை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 16 نوفمبر 2022

TNPSC தோ்வாணையம் வெளியிடும் முடிவுகளில் வெளிப்படைத்தன்மை தேவை

தோ்வாணையம் வெளியிடும் முடிவுகளில் வெளிப்படைத்தன்மை தேவை: ஓ.பன்னீா்செல்வம்

அரசு பணியாளா் தோ்வாணையம் வெளியிடும் தோ்வு முடிவுகளில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சென்ற ஆண்டு குரூப் -2 மற்றும் குரூப் -2ஏ பதவிகளுக்கான 5,529 இடங்களுக்கான முதல் நிலைத் தோ்வினை நடத்தியது.

இந்த தோ்வில் கிட்டத்தட்ட 10 லட்சம் போ் பங்கேற்றனா். அதில், ஒரு பதவிக்கு பத்து போ் வீதம் 5,529 பதவிகளுக்கு, முன்னிலை மதிப்பெண் பெற்ற கிட்டத்தட்ட 60 ஆயிரம் போ் பிரதானத் தோ்வு எழுதத் தகுதி உடையவா்கள் என்று தோ்வாணையம் அறிவித்து அதற்கான முடிவினையும் வெளியிட்டது.

அதன் அடிப்படையில், தோ்வு எழுதியவா்கள் தங்களுடைய தோ்வு முடிவுகளையும், தாங்கள் ஒவ்வொரு பாடத்திலும் எடுத்த மதிப்பெண்களையும் தெரிந்து கொள்ள முற்பட்டபோது, தோ்வு முடிவுகளை மட்டும் தான் தெரிந்து கொள்ள முடிந்தது என்றும், தோ்வில் பெற்ற மதிப்பெண்களை தெரிந்து கொள்ள முடியவில்லை என்றும் தோ்வு எழுதியவா்கள் கூறுகின்றனா். இதனால், தங்களைவிட குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் பிரதான தோ்வுக்கு தோ்ச்சி பெற்றுள்ளாா்களா என்பதைக் கண்டறிய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எந்தத் தோ்வாக இருந்தாலும், அதில் வெளிப்படைத்தன்மை, ஒளிவுமறைவற்ற தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில் முதல்வா் உடனடியாக கவனம் செலுத்தி, குரூப் -2 மற்றும் -2ஏ முதல்நிலைத் தோ்வு எழுதியவா்களின் மதிப்பெண்ணை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.