TNPSC CCSE-Gr(II-Mains) தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொல்.திருமாவளவன் அறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 30 نوفمبر 2022

TNPSC CCSE-Gr(II-Mains) தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொல்.திருமாவளவன் அறிக்கை

டி.என்.பி.எஸ்.சி

TNPSC CCSE-Gr(II-Mains) திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்

தொல்.திருமாவளவன் அறிக்கை

சென்னை, அசோக்நகர், அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் 'திருமா பயிலகத்தின்’ மூலம் அரசு வேலைவாய்ப்புக்கான பயிற்சி வகுப்புகளைக் கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இப்பயிலகத்தில் பயிற்சி பெற்ற பலர் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர். திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இயங்கும் இப்பயிலகத்தில் 03.12.2022 (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு TNPSC- CCSE- Gr(II-Mains) தேர்விற்கான வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. மேலும், பயிற்சி வகுப்புகள் தேர்வு மற்றும் கலந்துரையாடல் (TEST and Discussion) முறையில் நடைபெற இருக்கிறது. தொலைதூர போட்டியாளர்கள் பயனுறும் வகையில் இணையவழி பயிற்சி வகுப்புகளும் நடைபெற இருக்கிறது.

இப்பயிற்சி வகுப்பு மற்றும் தேர்வுத்தொடரில் கலந்துகொள்ள விரும்புவோர். கீழ்க்கண்ட அலைபேசி எண்கள், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.

சென்னை:

தொடர்புக்கு: 8610392275, 9042991182

மின்னஞ்சல் :thirumapayilagam@gmail.com

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.