TNPSC இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 82/2022 - நாள்:30.11.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 30 نوفمبر 2022

TNPSC இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 82/2022 - நாள்:30.11.2022

சிறை அலுவலர் (ஆண்கள் ) மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்) பதவிகளுக்கான தேர்வு நடைபெறும் நாள் மற்றும் தேர்வு நடைபெறும் மையங்கள் தொடர்பான செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பதாரர்களுக்கான அறிவிப்பு

செய்தி வெளியீடு எண்: 82/2022

நாள்:30.11.2022

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 14.09.2022-ஆம் நாளிட்ட அறிவிக்கை எண்.25/2022-இல், 22.12.2022 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில், ஏழு தேர்வு மையங்களில் எழுத்து / கணினி வழித் தேர்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்) பதவிகளுக்கான தேர்வானது 26.12.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் சென்னை, கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், இராமநாதபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், அரியலூர், செங்கல்பட்டு ஆகிய 24 தேர்வு மையங்களில் கணினி வழித் தேர்வாக (CBT Method) நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பி. உமா மகேஸ்வரி, இ.ஆ.ப.,

செயலாளர்



CLICK HERE TO DOWNLOAD

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.