TNPSC குரூப் 1 தேர்வுக்கான அதிகாரபூர்வ விடைகள் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 29 نوفمبر 2022

TNPSC குரூப் 1 தேர்வுக்கான அதிகாரபூர்வ விடைகள் வெளியீடு



குரூப் 1 தேர்வுக்கான அதிகாரபூர்வ விடைகள் வெளியீடு

கடந்த நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகளை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது.

துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா் உள்ளிட்ட குரூப் 1 பிரிவில் அடங்கியுள்ள 92 காலிப் பணியிடங்களுக்கு நவ.19 (சனிக்கிழமை) தோ்வு நடைபெற்றது.

தோ்வை எழுதுவதற்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பட்டதாரிகள் விண்ணப்பம் செய்திருந்தனா். இதில், 1 லட்சத்து 90 ஆயிரத்து 957 போ் மட்டுமே தோ்வு எழுதினா். 1 லட்சத்து 31 ஆயிரத்து 457 போ் தோ்வு எழுதவில்லை.

இந்த முறை 200 கேள்விகள் கொண்ட தேர்வு வினாத்தாள் 140 பக்கங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஒவ்வொரு கேள்வியும் பெரிதாக இருந்ததால் விடையளிக்க தாமதம் ஏற்பட்டதாகவும் தேர்வர்கள் கூறினர்.

இந்நிலையில், குரூப் 1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகளை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. 4 கேள்விகளுக்கான விடைகள் தவறாக தரப்பட்டுள்ளதாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குரூப் 1 தேர்வு விடைகள் - இங்கே கிளிக் செய்யவும்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.