IGNOU பல்கலை. மாணவர் சேர்க்கை நவ.7 வரை நீட்டிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 2 نوفمبر 2022

IGNOU பல்கலை. மாணவர் சேர்க்கை நவ.7 வரை நீட்டிப்பு

மத்திய அரசு பல்கலைக்கழக்கழகமான இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தொலைதூரக்கல்வி திட்டம் வாயிலாக பல்வேறு சான்றிதழ், டிப்ளமா, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது.

ஜூலை 2022 பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி அக்டோபர் 31-ம்தேதி முடிவடைந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடைசி தேதியை நவம்பர் 7 வரை நீட்டித்துள்ளது.

எனவே, தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நவம்பர் 7-ம் தேதி வரை ஆன்லைனில் (https://ignouadmission.samarth.edu.in) விண்ணப்பிக்கலாம். எனினும் இந்த காலநீட்டிப்பு சான்றிதழ் மற்றும் செமஸ்டர் சார்ந்த படிப்புகளுக்கு பொருந்தாது, என இக்னோ சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.