அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து: தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 9, 2022

அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து: தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து: தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றது. மாணவர்கள் எந்தெந்த கல்லூரிகளை தேர்வு செய்தார்களோ அவர்கள் சம்மந்தப்பட்ட கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். இதற்கான கால அவகாசம் வரும் 12ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட கல்லூரிகள் கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதாக தொடர்ச்சியாக மருத்துவ கல்லூரி இயக்குநரகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்தகைய கல்லூரிகளுக்கு தனித்தனியே நோட்டீஸ் அனுப்பி கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் செந்தில் குமார் அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அதில்; தேசிய மருத்துவ ஆணையம், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை கல்லூரிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கட்டண நிர்ணய குழு எந்தவிதமான கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறதோ அத்தகைய கட்டணங்களை மட்டுமே மாணவர்களிடம் வசூலிக்க வேண்டும். இதை மீறி அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுத்துப்பூர்வமான புகார்கள் வந்தால் சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரிகளின் அங்கீகாரம் திரும்ப பெறப்படும் என்றும், கல்லூரிக்கான இணைப்பு அங்கீகாரம் திரும்ப பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.