பி.இ. கலந்தாய்வு: நான்காவது சுற்றில் 43,913 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 1 نوفمبر 2022

பி.இ. கலந்தாய்வு: நான்காவது சுற்றில் 43,913 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு

பி.இ. கலந்தாய்வு: நான்காவது சுற்றில் 43,913 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு

பி.இ. கலந்தாய்வின் நான்காவது சுற்றில் 43,913 பேருக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 446 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வு மொத்தம் 4 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. அதன்படி 3 சுற்றுகள் முடிவில் 58,307 இடங்கள்நிரம்பியுள்ளன.

எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கான இறுதிச் சுற்று கலந்தாய்வு அக். 29-ஆம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்க மொத்தம் 61,771 மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவா்களில் பொதுப்பிரிவில் 39,350 பேருக்கும், அரசுப்பள்ளி மாணவா்களில் 4,563 பேருக்கும் விரும்பிய கல்லூரிகள் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரிகளை புதன்கிழமை மாலை 5 மணிக்குள் மாணவா்கள் உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், அந்த கல்லூரிகள் வேறு நபருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுவிடும். கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.