நவ. 28, 29-இல் ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 23 نوفمبر 2022

நவ. 28, 29-இல் ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு

நவ. 28, 29-இல் ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு

சென்னை, நவ. 23: பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நவ.28,29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

நிகழ் கல்வியாண்டில் 1.8.2022 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிட மிருந்து விவரங்கள் பெறப்பட்டுள்ளன.

அந்த விவரங்களின் அடிப்படையில், ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்ட பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்துக்குள் நிரப்பத் தகுந்த காலிப் பணியிடங்கள், கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்வதற்கான கலந்தாய்வு வரும் 28- ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 29-ஆம் தேதி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் எமிஸ் இணையதளம் வழியாக நடைபெ றவுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.