அனைத்து வகை பள்ளிகளிலும் 14.11.2022 அன்று இறைவணக்கக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய உறுதிமொழி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 13 نوفمبر 2022

அனைத்து வகை பள்ளிகளிலும் 14.11.2022 அன்று இறைவணக்கக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய உறுதிமொழி

அனைத்து வகை பள்ளிகளிலும் 14.11.2022 அன்று இறைவணக்கக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய உறுதிமொழி

அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மேற்கண்ட உறுதி மொழியை 14.11.22 அன்று காலை இறைவணக்கக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய உறுதிமொழி

Annexure 1- உறுதிமொழி

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களாகிய நாங்கள் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் ஓர் உறுதி ஏற்கிறோம்.

சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் நலனுக்காகவும் எப்போதும் உடன் நிற்போம் என்றும், அவர்களுக்கு இருக்கக்கூடிய சமூக, பொருளாதார, பண்பாட்டுச் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க எங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என்றும் உறுதி கூறுகிறோம்.

முழுமையாகவும், சமத்துவத்துடனும் வெற்றிகரமாகவும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இங்கு எந்தப் பாகுபாடும் இன்றி, அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்குரிய பாதுகாப்பை அவர்களுக்கு அளிப்பது இன்றியமையாதது நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.

என அவர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவே முக்கியத்துவம் அளித்து நட்புணர்வை வளர்ப்போம் என்றும் உறுதிமொழி ஏற்கிறோம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.