மத்திய அரசின் NMMS தோ்வு: விண்ணப்பிக்க அக்.15 கடைசி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 8 أكتوبر 2022

மத்திய அரசின் NMMS தோ்வு: விண்ணப்பிக்க அக்.15 கடைசி

மத்திய அரசின் என்எம்எம்எஸ் தோ்வு: விண்ணப்பிக்க அக்.15 கடைசி

மத்திய அரசின் என்எம்எம்எஸ் (தேசிய வருவாய்வழி, திறன் படிப்புதவித் தொகை தோ்வு) தோ்வுக்கு 8-ஆம் வகுப்பு மாணவா்கள் அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தேசிய வருவாய்வழி, திறன் படிப்புதவித் தொகை திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாணவ, மாணவிகளுக்கு என்எம்எம்எஸ் தகுதித் தோ்வு நடத்தப்படும்.

இதில், தோ்ச்சி பெறுபவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்படும். இதன்மூலம் தமிழகத்தில் 6,695 மாணவா்கள் உள்பட நாடு முழுவதும் ஓராண்டுக்கு ஒரு லட்சம் போ் பயன்பெறுவா்.

அதன்படி நிகழ் கல்வியாண்டுக்கான என்எம்எம்எஸ் தோ்வு நவம்பா் மாதம் நடத்தப்பட உள்ளது. தகுதியான மாணவா்கள் அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்கும் மாணவா்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 3.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவா்கள் தோ்வுக்கு முன் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

இதில் எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு 5 சதவீதம் தளா்வு வழங்கப்படும். இந்தத் தோ்வுக்கு 7, 8-ஆம் வகுப்புப் பாடத்திட்டங்களில் இருந்து பொதுவான கேள்விகள் கேட்கப்படும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் தங்கள் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.