குறைந்த விலை.. 4ஜி வசதி.. விரைவில் வருகிறது ஜியோ லேப்டாப்..! - Low price.. 4G facility.. Jio laptop coming soon..! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 3 أكتوبر 2022

குறைந்த விலை.. 4ஜி வசதி.. விரைவில் வருகிறது ஜியோ லேப்டாப்..! - Low price.. 4G facility.. Jio laptop coming soon..!

முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், 4ஜி சிம் கார்டுடன் கூடிய மடிக் கணினியை 15,000 ரூபாய் விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், தனக்கென தனி வாடிக்கையாளர்களைக் கொண்டு தொலைத்தொடர்பு சேவையில் கொடிகட்டி பறந்து வரும் ஜியோ நிறுவனம், தற்போது புதிதாக மடிக்கணினி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக, கணினி தயாரிப்பில் முன்னணி நிறுவனமான குவால்காம் மற்றும் மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்து மடிக்கணினியை தயாரிக்கிறது.

ஜியோ மடிக்கணினிக்கான சிப்களை குவால்காமின் துணை நிறுவனமான ஆம்ஸ் வழங்க உள்ளது. ஜியோ மடிக்கணினியின் மைக்ரோ சாஃப்டின் விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டம் பயன்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு ஜியோ மடிக்கணினியை விநியோகிக்க ஜியோ திட்டமிட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் பொதுச்சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.