EPFO E Nomination செய்யவில்லை என்றால் உங்களுக்குதான் நஷ்டம்: செயல்முறை இதோ - If EPFO doesn't make E Nomination, it's your loss: Here's the process - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, October 1, 2022

EPFO E Nomination செய்யவில்லை என்றால் உங்களுக்குதான் நஷ்டம்: செயல்முறை இதோ - If EPFO doesn't make E Nomination, it's your loss: Here's the process

EPFO E Nomination செய்யவில்லை என்றால் உங்களுக்குதான் நஷ்டம்: செயல்முறை இதோ - If EPFO doesn't make E Nomination, it's your loss: Here's the process

EPFO E Nomination: பல வசதிகளை அளிக்கும் இபிஎஃப்ஓ அமைப்பு, இ-நாமினேஷன் செய்வது மிகவும் அவசியம் என்று இப்போது கூறியுள்ளது.

இ-நாமினேஷன் செய்வது மிகவும் அவசியம்: இபிஎஃப்ஓ

பலன்களை எளிதாகப் பெறுவதற்கு இ-நாமினேஷன் உதவுகிறது.

நாமினிக்கு ஆன்லைன் க்ளைம் சமர்ப்பிக்கும் வசதியையும் இந்த அமைப்பு வழங்குகிறது.

பிஎஃப் லாக் இன்: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தொழில்கள் மற்றும் நிறுவனங்களில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு மூன்று சமூக பாதுகாப்பு திட்டங்களை நடத்துகிறது. அமைப்பு அதிக சேவைகளை வழங்க முயற்சித்து வருவதாகவும் இபிஎஃப்ஓ கூறுகிறது. மேலும் இது பெண் ஊழியர்களுக்கு சமமான பலன்களை வழங்குகிறது. உடல் ஊனமுற்றதால் தற்போதைய வேலையை விட்டு வெளியேற வேண்டிய ஊழியர்களுக்கும் சிறப்பு சலுகைகள் உள்ளன. இப்படிப்பட்ட பல வசதிகளை அளிக்கும் இபிஎஃப்ஓ அமைப்பு, இ-நாமினேஷன் செய்வது மிகவும் அவசியம் என்று இப்போது கூறியுள்ளது.

இ-நாமினேஷன்

இ-நாமினேஷனை தாக்கல் செய்வது மிகவும் முக்கியம் என்று இபிஎஃப்ஓ கூறுகிறது. துரதிஷ்டவசமாக, உறுப்பினரின் மரணம் ஏற்பட்டால், வருங்கால வைப்பு நிதி (PF), ஓய்வூதியம் (EPS) மற்றும் காப்பீடு (EDLI) பலன்களை எளிதாகப் பெறுவதற்கு இ-நாமினேஷன் உதவுகிறது என்று இபிஎஃப்ஓ கூறுகிறது. நாமினிக்கு ஆன்லைன் க்ளைம் சமர்ப்பிக்கும் வசதியையும் இந்த அமைப்பு வழங்குகிறது.

CloseCloseoverlay-clever

இ-நாமினேஷன் செய்வதற்கான செயல்முறை இதோ:

- இபிஎஃப்ஓ ​​​​இணையதளம் > சேவைகள் (சர்வீசஸ்) > பணியாளர்களுக்கு (ஃபார் எம்ப்ளாயீஸ்) > உறுப்பினர் UAN / ஆன்லைன் சேவை (மெம்பர் யுஏஎன் / ஆன்லன் சர்வீஸ்) என்பதைக் கிளிக் செய்யவும்.

- UAN மற்றும் கடவுச்சொல் மூலம் லாக் இன் செய்யவும்.

- மேனேஜ் டேப்பின் கீழ் 'இ-நாமினேஷன்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.