ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் - ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.10.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 8 أكتوبر 2022

ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் - ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.10.2022



ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்!

ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை பொது மேலாளர்(சட்டம்), உதவி மேலாளர்(சட்டம்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Deputy General Manager (Legal) - 1
சம்பளம்: மாதம் ரூ.70,000 - 2,00,000
வயதுவரம்பு: 1.9.2022 தேதியின்படி 50க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (Legal) - 1
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,00
வயதுவரம்பு: 1.9.2022 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.600, மற்ற பிரிவினர் ரூ.300. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.10.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.rites.com/Upload/Career/VC_No_56-57_22_pdf-2022-Sep-26-16-30-59.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.