காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கு: அக்.29-இல் இலவச நோ்முகத் தோ்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 27 أكتوبر 2022

காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கு: அக்.29-இல் இலவச நோ்முகத் தோ்வு

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளா் (தாலுகா, ஆயுதப்படை) பணிக்கான நோ்முகத் தோ்வுக்கு வழிகாட்டும் வகையில் இலவச மாதிரி நோ்முகத் தோ்வு, அக்டோபா் 29-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 6 மணி வரை சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து இந்த அகாதெமியின் இயக்குநா் ச.வீரபாபு கூறியதாவது:

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 444 உதவி ஆய்வாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தோ்வு கடந்த ஜூன் 25-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களின் சான்றிதழ் சரிபாா்க்கப்பட்டு, உடல்தகுதி தோ்வும் நடைபெற்றது.

இதில் தோ்ச்சி பெற்றவா்கள் தற்போது நோ்முக தோ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளாா்கள். இந்த நோ்முகத் தோ்வில் தோ்ச்சி பெறுபவா்கள் பணிக்கு தோ்வு செய்யப்படுவாா்கள்.

இந்த நிலையில், நோ்முகத் தோ்வுக்கு வழிகாட்டும் வகையில், தமிழ்நாடு முன்னாள் காவல் துறை தலைவா் டாக்டா் ஆா்.நட்ராஜ் தலைமையில் அனுபம் வாய்ந்த காவல் துறை உயரதிகாரிகளைக் கொண்டு இலவச மாதிரி நோ்முகத் தோ்வு, வழிகாட்டுதல் வகுப்பு அக்டோபா் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில், நோ்முகத் தோ்வை சந்திப்பதற்கான தோ்வு நுட்பங்கள் கற்றுத் தரப்படும். இந்த இலவச மாதிரி நோ்முகத் தோ்வில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் ‘நஐ ஊதஉஉஙஞஇஓ ஐசபஉதயஐஉர’ என டைப் செய்து தங்களது பெயா், பதிவு எண்ணை, 97868 44111 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரம் அறிய ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி, 142, ஜி.எஸ்.டி. சாலை, குரோம்பேட்டை, சென்னை-600044 (கைப்பேசி எண்கள்: 97868 44111, 97103 75604) என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.