பத்தாம் வகுப்பு: அக்.14 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 11 أكتوبر 2022

பத்தாம் வகுப்பு: அக்.14 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு: அக்.14 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதிய தோ்வா்களுக்கு அக்டோபா் 14-ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியில் கடந்த கல்வியாண்டில் (2021-2022) பத்தாம் வகுப்புக்கு பொதுத் தோ்வு மே 6 முதல் 30-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை 9.3 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா். இதன் முடிவுகள் ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

தோ்வெழுதிய தோ்வா்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூலையில் வழங்கப்பட்டன. எனினும், அச்சிடுதல் பணிகளில் தொய்வு ஏற்பட்டதால் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்வதில் தொடா் தாமதம் நிலவியது.

இதையடுத்து தற்காலிக மதிப்பெண் சான்றுகளின் அடிப்படையில் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், பத்தாம் வகுப்பு தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்கள் மூலம் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 14-ஆம் தேதி) காலை 10 மணி முதல் விநியோகம் செய்யப்படும். தனித்தோ்வா்கள் அவா்கள் தோ்வெழுதிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.