10ம் வகுப்பு அசல் சான்றிதழ் பள்ளிகளில் பெறலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 14 أكتوبر 2022

10ம் வகுப்பு அசல் சான்றிதழ் பள்ளிகளில் பெறலாம்

10ம் வகுப்பு அசல் சான்றிதழ் இன்று பள்ளிகளில் பெறலாம்

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், இன்று வழங்கப்படுகின்றன.

தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ - மாணவியருக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஏற்கனவே வழங்கப்பட்டது.

இந்நிலையில், துணை தேர்வு முடிவு மற்றும் மறுகூட்டல் முடிவு வெளியான நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ் தயாராகியுள்ளது.

மாணவ - மாணவியர் தாங்கள் படித்த பள்ளிகளில், இன்று காலை 10:00 மணி முதல், தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம். தனி தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில், சான்றிதழ்கள் பெறலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.