10ம் வகுப்பு சான்றிதழ்வரும் 14ல் கிடைக்கும் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 11 أكتوبر 2022

10ம் வகுப்பு சான்றிதழ்வரும் 14ல் கிடைக்கும்

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, வரும் 14ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என, அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவ - மாணவியருக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டும் ஏற்கனவே வழங்கப்பட்டது.

இந்நிலையில், துணை தேர்வு முடிவு மற்றும் மறுகூட்டல் முடிவு வெளியான நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

மாணவ - மாணவியர் தாங்கள் படித்த பள்ளிகளில், வரும் 14ம் தேதி காலை 10:00 மணி முதல், தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

தனி தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் சான்றிதழ்கள் பெறலாம் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.