அங்கீகாரம் பெற்ற வணிகவியல் தட்டச்சுப் பயிலக உரிமையாளர்கள் மற்றும் தேர்வர்களின் கவனத்திற்கு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 25 سبتمبر 2022

அங்கீகாரம் பெற்ற வணிகவியல் தட்டச்சுப் பயிலக உரிமையாளர்கள் மற்றும் தேர்வர்களின் கவனத்திற்கு

சுற்றறிக்கை 117531 / R4 / 2022, நாள் 22.09.2022

அங்கீகாரம் பெற்ற வணிகவியல் தட்டச்சுப் பயிலக உரிமையாளர்கள் மற்றும் தேர்வர்களின் கவனத்திற்கு

இத்துறையின் இணையதளத்தின் மூலம் தட்டச்சுத் தேர்வு 24.09.2022 மற்றும் 25.09.2022 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு எண் WA (MD) No.1021/2022 தொடர்பாக இரண்டு வாரத்திற்கு தேர்வு நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே அறிவித்த தேதியன்று நடைபெறவுள்ள தட்டச்சுத்தேர்வு நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலிருந்து இறுதி தீர்ப்பு வரப்பெற்ற பின்பு தட்டச்சுத் தேர்வு நடைபெறவுள்ள தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.