கோரிக்கையை வலியுறுத்தி ‘நாக்கில்' முதல்வர் ஸ்டாலின் உருவத்தை வரைந்த ஆசிரியர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 2 سبتمبر 2022

கோரிக்கையை வலியுறுத்தி ‘நாக்கில்' முதல்வர் ஸ்டாலின் உருவத்தை வரைந்த ஆசிரியர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் மணலூர்பேட்டை சேர்ந்த செல்வம். இவர் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி தனது நாக்கில் முதல்வர் ஸ்டாலின் உருவத்தை வரைந்தார். கடந்த 11 ஆண்டு காலமாக பகுதிநேர ஆசிரியர்களாக சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து கொண்டு வருகிறோம். குறைந்த வேலை, குறைந்த ஊதியம் என்பதால் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறோம்.

வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம், தன்னுடைய நாக்கில் முதல்வர் ஸ்டாலின் படத்தை நீர் வண்ணங்களை கொண்டு பத்து நிமிடங்களில் வரைந்தார். இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்களும் மற்ற பகுதிநேர ஆசிரியர்களும் அவரை பாராட்டினர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.