நீட் தேர்வில் தோல்வி: திருவள்ளூரில் மாணவி தற்கொலை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 8 سبتمبر 2022

நீட் தேர்வில் தோல்வி: திருவள்ளூரில் மாணவி தற்கொலை

நீட் தேர்வில் தோல்வி: திருவள்ளூரில் மாணவி தற்கொலை

நீட் தேர்வு முடிவுகள் புதன்கிழமை இரவு வெளியான நிலையில், தேர்வில் தோல்வி அடைந்த திருவள்ளூர் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதி, இந்திரா நகர், சோழபுரத்தைச் சேர்ந்த லக்ஷா ஸ்வேதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் ஏற்கனவே பிலிப்பின்ஸ் நாட்டில் இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இவர் அரசுப் பள்ளி தலைமையாசிரியரின் மகளாவார். இவர் 2019ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தார். தந்தையிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வரும் தாயுடன் ஸ்வேதா வசித்து வந்துள்ளார்.

நேற்று நள்ளிரவு 3 மணிக்கு கண்விழித்துப் பார்த்த ஸ்வேதாவின் தாய் அமுதா மகள் தூக்கில் தொங்குவதைப் பார்த்து ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.