திருப்பத்தூரில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை வெட்டி படுகொலை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 7 سبتمبر 2022

திருப்பத்தூரில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை வெட்டி படுகொலை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தலைமை ஆசிரியர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் தென்மாப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் ரஞ்சிதம்(வயது 52) இன்று புதன்கிழமை பள்ளிக்கு வராததை அறிந்த சக ஆசிரியர்கள் வீட்டில் போய் பார்க்கும் பொழுது இவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதுகுறித்து திருப்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து உடனடியாக வந்து பார்த்துள்ளனர். பின்னர் தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், நகர் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் ஆகியோர் கொலை நடந்த வீட்டை பார்வையிட்டனர்.

தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இவரது கணவர் ராஜேந்திரன் ஏற்கெனவே காலமாகிவிட்டார். இவரது மகன் அம்பேத்கார் பாரதி கோயம்புத்துார் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். மகள் அபிமதி பாரதிக்கு திருமணமான நிலையில், பட்டுக்கோட்டையில் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

கொலை செய்யப்பட்ட தலைமை ஆசிரியை ரஞ்சிதம் செவ்வாய்க்கிழமை அன்று இரவு வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து இவரை அரிவாளால் வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட தலைமை ஆசிரியையின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.