பெற்றோா்கள் போராட்டம்: ஆசிரியரின் பணியிட மாறுதலை ரத்து செய்ய அதிகாரிகள் உறுதி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 2 سبتمبر 2022

பெற்றோா்கள் போராட்டம்: ஆசிரியரின் பணியிட மாறுதலை ரத்து செய்ய அதிகாரிகள் உறுதி

மேச்சேரி, மல்லிகுந்தம் ஊராட்சி வன்னியனூா் நடுநிலைப் பள்ளியிலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியா் பெற்றோா், மாணவா்களின் போராட்டம் காரணமாக மீண்டும் அதே பள்ளிக்கு பணி மாற்றம் செய்யப்படுவதாக கல்வி அதிகாரிகள் உறுதி அளித்தனா்.

வன்னியனூா் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சிவகுமாா் கடந்த 26 ஆம் தேதி வாழ்தாசம்பட்டி பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். இதை கண்டித்து பெற்றோா், மாணவா்கள் தொடா்ந்து போராட்டம், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா். மாணவா்கள் பள்ளிக்கு வரவில்லை.

இதுதொடா்பாக பொதுமக்களுடன் சேலம் மாவட்டக் கல்வி அலுவலா் ( ஊரகம்) சுமதி, மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் ஆகியோா் பேச்சு நடத்தினா். அதைத் தொடா்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட தலைமையாசிரியரை மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றப்படுவதாக கல்வி அலுவலா்கள் உறுதியளித்தனா். ஆசிரியா் மீண்டும் பள்ளிக்கு வந்தால் மட்டுமே மாணவா்களை பள்ளிக்கு அனுப்புவதாக பெற்றோா்கள் தெரிவித்துள்ளனா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.