அனுமதி பெறாமல் பள்ளி வளாகத்தில் தங்கும் விடுதிகள், இல்லங்கள் செயல்பட்டால் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 3 سبتمبر 2022

அனுமதி பெறாமல் பள்ளி வளாகத்தில் தங்கும் விடுதிகள், இல்லங்கள் செயல்பட்டால் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை

அனுமதி பெறாமல் பள்ளி வளாகத்தில் தங்கும் விடுதிகள், இல்லங்கள் செயல்பட்டால் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை

பள்ளி வளாகத்தில் அனுமதி பெறாமல் தங்கும் விடுதிகள், இல்லங்கள் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில், பள்ளி வளாகத்தினுள் மாணவ, மாணவியர்களுக்கு தங்கும் விடுதி இல்லங்கள் பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்பட்டால், அவ்வாறு நடத்தப்படும் விடுதிகளுக்கு தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசாணை, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறையின்படி வெளியிடப்பட்டுள்ள சட்டம் மற்றும் அரசாணைகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான தங்கும் விடுதிகள், இல்லங்கள் செயல்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்தினுள் செயல்படும் தங்கும் விடுதிகள், இல்லங்கள் முறையாக மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பித்து அனுமதி பெறப்பட்ட பின்னரே செயல்பட வேண்டும்.

அவ்வாறு முறையாக அனுமதி பெறப்படாமல் ஏதேனும் தங்கும் விடுதிகள், இல்லங்கள் பள்ளி வளாகத்தினுள் செயல்பட்டால், அந்த விடுதிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனுமதியின்றி செயல்படும் விடுதிகள், இல்லங்கள் ஒரு மாத காலத்திற்குள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.