டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா அழைப்பிதழ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 2 سبتمبر 2022

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா அழைப்பிதழ்



பள்ளிக் கல்வித் துறை

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா அழைப்பிதழ்

அன்புடையீர் வணக்கம்,

நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2053 ஆவணித் திங்கள் 20 ஆம் நாள் (05.09.2022) திங்கள் கிழமை மாலை 3.00 மணியளவில் தத்துவமேதை டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் விழாத் தலைமையேற்கவும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர் பாபு அவர்கள் முன்னிலையேற்கவும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சிறந்த ஆசிரியர்களுக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதினை வழங்கி விழா சிறப்புரையாற்றவும் அன்புடன் இசைந்துள்ளார்கள்.

மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க உள்ளார்கள். தாங்கள் இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவண்

க.நந்தகுமார், இ.ஆ.ப.. ஆணையர். பள்ளிக் கல்வி

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.