இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி - CEO Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 15 سبتمبر 2022

இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி - CEO Proceedings

இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி - CEO Proceedings - Numeracy Practice for Second Semester - CEO Proceedings

1 - 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி - திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்..
திருச்சிராப்பள்ளிமாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

முன்னிலை:திரு.ர.பாலமுரளி, எம்ஏ, பி.எட்,

ந.க.எண். 938/பயிற்சி/2022. நாள்: 12.09.2022.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2022-2023 எண்ணும் எழுத்து சார்ந்து மாநில அளவிலான பயிற்சியில் கலந்து கொள்ள கருத்தாளர்களை பணியில் இருந்து விடுவிக்க தெரிவித்தல் - சார்பு.

1. இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனரின் செயல்முறைகள்.

ந.க.எண். 2411/ஈ2/2021. நாள்: .09.2022.

2. பள்ளிக்கல்வித் (ERT)துறை அரசாணை எண் 147 நாள்: 22.10.2021

பொருள்:

பார்வை:

**********



2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 3 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராயச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் முதல் பருவத்திற்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்திற்கு பாடபொருள் உருவாக்கப்பட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து பார்வையில் காணும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் சார்ந்து 1 முதல் 5 வகுப்புகள் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாம் பருவத்திற்கான பயிற்சிகள் மாநில மற்றும் மாவட்ட அளவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி KSR பொறியியல் கல்லூரி திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டத்தில் 19.09.2022 அன்று தமிழ் பாடத்திற்கும், 20.09.2022 அன்று ஆங்கிலப்பாடத்திற்கும், 21.09.2022 அன்று கணித பாடத்திற்கும் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் முதன்மை கருத்தாளார்களாக செயல்பட உள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் பாடவாரியாக இணைக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.