தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்காலத்தடை: உயர்நீதிமன்றம் - Interim stay on conducting typing test in Tamil Nadu: High Court
தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்து, உத்தரவிட்டுள்ளது.
தட்டச்சு தேர்வை பழைய முறைப்படி நடத்த உத்தரவிட்டதை எதிர்த்து, பிரவீன் குமார் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று(செப்.,21) விசாரணைக்கு வந்தது.
அப்போது, உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவு: தட்டச்சு தேர்வு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்தக்கூடாது. மேலும், பழைய முறைப்படி தட்டச்சு தேர்வு நடத்துவது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து, உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதி உத்தரவிட்டார்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.