ஆசிரியை மீது வகுப்பில் தாக்குதல் - Attack on the teacher in the class! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 14 سبتمبر 2022

ஆசிரியை மீது வகுப்பில் தாக்குதல் - Attack on the teacher in the class!

ஆசிரியை மீது வகுப்பில் தாக்குதல்!

*பள்ளியில் பணி செய்து கொண்டிருந்த ஆசிரியை வகுப்பிற்குள் புகுந்து தாக்கிய குடிபோதை ஆசாமி ஆலங்குடி அருகே பரபரப்பு..*

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்தவர் ஆசிரியை சித்திரா தேவி. இவர் ஆலங்குடி அருகே உள்ள கன்னியான்கொல்லை என்னும் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

வழக்கம் போல பள்ளிக்கு பணிக்குச் சென்ற ஆசிரியை சித்ராதேவி அங்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வாணக்கன்காட்டைச் சேர்ந்த சித்திரைவேல் எனும் ஆசாமி போதையில் பள்ளிக்குள் புகுந்து வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பள்ளியின் ஆசிரியை சித்ரா தேவியை கன்னத்தில் அறைந்ததோடு, கொலை மிரட்டல் விடுத்து ஆசிரியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் நடந்த போது பள்ளியில் பயிலும் 26 மாணவர்கள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியை உள்ளிட்டோர் சம்பவ இடத்திலிருந்துள்ளனர்.

பின்னர் அங்கு வந்தவர்கள் சித்திரவேலை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர்.

இது தொடர்பாக ஆசிரியை சித்ராதேவி வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வடகாடு போலீசார் சித்திரைவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.