Change in the quarter examination holiday! - காலாண்டு தேர்வு விடுமுறையில் மாற்றம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 20 سبتمبر 2022

Change in the quarter examination holiday! - காலாண்டு தேர்வு விடுமுறையில் மாற்றம்!

Change in the quarter examination holiday! - காலாண்டு தேர்வு விடுமுறையில் மாற்றம்!

அரசு பள்ளிகளின் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், காலாண்டு தேர்வு விடுமுறை, அக்., 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும், அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலும், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, அக்.,6 முதல் 8 வரை ஒன்றிய அளவில் பயிற்சி நடத்தப்பட உள்ளது.

எனவே, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் படிக்கும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும், முதல் பருவ தேர்வான காலாண்டு தேர்வு விடுமுறை, அக்., 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், அக்.,6 முதல் வழக்கம்போல், பள்ளிகளுக்கு வர வேண்டும். இதை, அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் வழியே தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.