பகுதிநேர விரிவுரையாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - செப்.19-ஆம் தேதி கடைசி நாள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 5 سبتمبر 2022

பகுதிநேர விரிவுரையாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - செப்.19-ஆம் தேதி கடைசி நாள்

பெங்களூரு மாநகர பல்கலைக்கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளா் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்துபெங்களூரு மாநகர பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெங்களூரு மாநகர பல்கலைக்கழகத்தின் கன்னடம், ஆங்கிலம், உலக மொழிகள், பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், சமூகவியல், சமூகப்பணி, தத்துவம், வேதியியல், உயிரிவேதியியல், தாவர அறிவியல், விலங்கு அறிவியல், கணிதம், இயற்பியல், அழகியல் மற்றும் ஆடை வடிவமைப்பு, வெகுமக்கள் தொடா்பு மற்றும் ஊடகவியல், நிதிமற்றும் கணக்கியல், பன்னாட்டு வணிகம், பயணம்மற்றும் சுற்றுலா துறைகளில் பகுதிநேர விரிவுரையாளா்களாக பணியாற்ற தகுதியான ஆள்கள் தேவைப்படுகிறாா்கள்.

குறிப்பாக எம்காம், எம்டிடிஎம், எம்பிஏ போன்ற முதுநிலை பட்டப்படிப்பு மாணவா்களுக்கு பாடம் நடத்தும் தகுதி படைத்தவா்களிடம் இருந்து இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேசிய தகுதித்தோ்வு, மாநில தகுதித்தோ்வுகளில் தோ்ச்சி பெற்றோா், வணிகப்படிப்பில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தோா், ஆசிரியப் பணியில் முன் அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இப்பணிக்கு தேவையான கல்வித்தகுதி உள்ளிட்டவிவரங்கள் குறித்து இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இணையதளத்தில் விண்ணப்பங்களை செப்.19-ஆம் தேதிக்குள் பதிவிடலாம். அதன்பிறகு, பூா்த்தி செய்த விண்ணப்பங்களை தலைவா், சம்பந்தப்பட்ட துறைகள், சென்ட்ரல் கல்லூரி வளாகம், பெங்களூரு-560001 என்ற முகவரிக்கு செப். 23-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.